கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில்‌ குடிநீர் விநியோகம்‌ குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு..!

சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு வார்டு எண்‌.26, 42, 43 ஆகிய பகுதிகளுக்குச் செல்லும்‌ குடிநீர் விநியோகம்‌ மற்றும்‌ குறைபாடுகள்‌, மாநகராட்சிக்கு பெறப்படும் குடிநீர் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ சின்னவேடம்பட்டி, துடியலூர்‌ பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனி அலுவலா்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ துடியலூர்‌ முதல்‌ சரவணம்பட்டி செல்லும்‌ சாலையில்‌ அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தால்‌ பராமரிக்கப்பட்டு வரும்‌ நீருந்து நிலையத்தில்‌ கோவை மாநகராட்சிக்குட்பட்ட சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு வார்டு எண்‌.26, 42, 43 ஆகிய பகுதிகளுக்குச் செல்லும்‌ குடிநீர் விநியோகம்‌ மற்றும்‌ குறைபாடுகள்‌, மாநகராட்சிக்கு பெறப்படும் குடிநீர் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர்‌, துடியலூரில்‌ அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில்‌ ஆய்வு மேற்கொண்டு அருகாமையில்‌ அமைந்துள்ள மாநகராட்சி கழிப்பிடம்‌ தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, உதவி ஆணையாளர்‌ அண்ணாதுரை,

உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கா்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...