வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட குடியிருப்பை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்..!

யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து வந்த மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட குடியிருப்பை காட்டுயானைகள் இடித்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் துவங்க உள்ளது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும் பொழுது மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி வழியாகச் செல்கிறது.

மேலும், செல்லும் வழியில் மளிகைக்கடை, சத்துணவு மையம், நியாய விலைக்கடை, மக்கள் குடியிருப்பு வீடுகள் போன்றவைகள் உள்ளதால் அதை உடைத்து சேதப்படுத்தி உள்ளிருக்கும் அரிசி பருப்பு போன்றவைகளை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.



இந்நிலையில், வால்பாறை அருகே முத்து முடி 2வது பிரிவு பகுதியில் 8 யானைகள் சுற்றித்திரிந்து நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து செல்வராஜ் என்பவர் வீட்டின் முன் நின்று தோட்டத்திலிருந்த பலா மரங்களை உடைத்து தின்றும் வீட்டின் சுவரை இடித்து உள்ளிருந்த பொருட்களை டிவி, கட்டில், பீரோ போன்ற பொருள்களைச் சேதப்படுத்தியது.



இதனையடுத்து, வீட்டிலிருந்து செல்வராஜ் அவரது மனைவியும் உயிர் தப்பிக்க வீட்டின் பின் வழியாகச் சென்று அருகிலிருந்த வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.

பின்னர், யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து வந்த மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் யானையை அப்பகுதியில் இருந்து விரட்டினர். யானைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...