கோவை அடுத்த ஆனைமலை ஜல் ஜீவன் மிஷின் குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: ஆனைமலை ஒன்றியத்தில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நாடு முழுவதிலும் அனைத்து வீடுகளுக்கும், 2024ம் ஆண்டுக்குள் சுத்தமான, போதிய அளவு குடிநீர் வழங்குவதற்காக மத்திய அரசு, 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தை உருவாக்கியது. இத்திட்டத்தில், ஆனைமலை ஒன்றியத்தில் சுப்பேகவுண்டன்புதுார், ரமணமுதலிபுதுார், ஜல்லிபட்டி, சோமந்துரை ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.
ஒவ்வொரு ஊராட்சிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குழாய் பதிப்பது, வட்டக்கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. ரமணமுதலிபுதுார், ஜல்லிபட்டி, சோமந்துரை ஆகிய ஊராட்சிகளில், திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது.
கடந்த ஆறு மாதங்களாக திட்ட பணிகள் நடைபெறாமல் உள்ளதால் பலரும் வைப்புத்தொகை செலுத்தியும், புதிய குடிநீர் இணைப்பு பெறமுடியாமல் சிரமப்படுகின்றனர். திட்டத்தை நிறைவேற்ற, வட்டக்கிணறுகள் அமைக்கும் பணிகள் நிலுவையுள்ளன.
இதனால் ஊராட்சி நிர்வாகத்தினர், மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வாடகைக்கு டிராக்டர் மற்றும் லாரிகள் வாயிலாக, குடிநீர் மற்றும் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கான தண்ணீர் வினியோகம் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக ஊராட்சி நிதி வீணாகிறது. வாகனங்களில் தண்ணீர் வழங்கும் போது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதை தவிர்க்க, 'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.