கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகம்மது யாசின் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு பேரறிஞர் அண்ணா 113வது பிறந்தநாள் விழா மற்றும் கோவை மாவட்ட திமுக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னதாக கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகம்மது யாசின் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதனையடுத்து, கோவை மாவட்ட திமுக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கிணத்துக்கடவு கிளை துவங்கப்பட்டது.

இந்த விழாவில் தலைமைக் கழக சொற்பொழிவாளர் கோவை தமிழ்பித்தன், சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, ஒன்றியக் குழு உறுப்பினர் ராமு, பி.பி. ஆறுச்சாமி, ஈஸ்வரன், லட்சுமணன், மணிகண்டன், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி செயலாளர் வழக்கறிஞர் வித்யாசாகர், கோபாலகிருஷ்ணன், செந்தில்குமார், சிபிஎம் மருதாசலம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சுப்பிரமணியன், அண்ணா பேருந்து நிலையம் ஆட்டோ சங்க செயலாளர் டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.