உடுமலை பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று திமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
திருப்பூர்: அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அறிஞர் அண்ணா கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என ஒவ்வொரு மாநிலங்களின் உரிமைக்காக குரல் கொடுத்த திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவரும், திமுக உருவாக காரணகர்த்தாவாக இருந்த அறிஞர் அண்ணா அவர்களின் 113வது பிறந்தநாள் விழா உடுமலைப்பேட்டையில் கொண்டாடப்பட்டது.
உடுமலை பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று திமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் மத்தீன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், சியாம் ஈஸ்வரன், சாகுல் அமீது, கிரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக சார்பிலும் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நகர செயலாளர் ஹக்கீம் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.