ராயல் கேர் மருத்துவரிடம் ரூ. 2.85 கோடி மோசடி செய்த குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

கோவை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயல் கேர் மருத்துவர் மருத்துவமனையை விரிவாக்கம் மற்றும் கட்டிட வேலைக்காக லோன் வாங்கி தருவதாக கூறி 2.85 கோடி கமிஷன் தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்ட ஆசாமிகளை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் உத்தரவின் பேரில் அவர்கள் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை ராயல்கேர் மருத்துவமனை தலைவர் மருத்துவர் மாதேஷ்வரனுக்கு கடன் ஏற்பாடு செய்து தருவதாக கடந்த, 2020 அக்., மாதம் புதுக்கோட்டை, ஆலங்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம் (55) உள்ளிட்ட 4 நபர்கள் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, கமிஷன் தொகையாக, 2.85 கோடி ரூபாய் பெற்றவர்கள் மோசடி செய்தனர்.

கோவை மாநகர குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார், சென்னையில் பதுங்கியிருந்த பன்னீர்செல்வம் மற்றும் செல்வகுமார் (54) ஆகியோரை கடந்த 15ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இவர்கள் இருவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...