பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு, மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கோவை: கோவையில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex.MLA தலைமையில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி, கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில், காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் தி்ருவுருவ சிலைக்கு, மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையும், சித்தாப்புதூர் மட்டசாலை பகுதியில் இனிப்புகளும், மநாக வீதியில் கழக கொடியேற்றப்பட்டு இனிப்புகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தீர்மான குழு இணைச்செயலாளர் முத்துச்சாமி, பகுதி கழக பொறுப்பாளர் சேதுராமன் மற்றும் மாவட்ட பொறுப்புக்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், வட்டக்கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.