கோவையில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்..!

சிறப்பு அடையாள அட்டை விண்ணப்பித்தவர்கள் தக்க சான்றுகளை வழங்கி, சிறப்பு அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் நாளை 16ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் சிறப்பு அடையாள அட்டை விண்ணப்பித்தவர்கள் தக்க சான்றுகளை வழங்கி, சிறப்பு அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID)க்கான ஆவணங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் (மணியக்காரர் அலுவலகம்/ VAO office) அலுவலகங்களிலும் 16.9.2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளில் UDID கார்டுக்கு விண்ணப்பித்து நாளது அதுவரை UDID கிடைக்கப்பெறாத மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல்கள் மருத்துவ சான்று உட்பட ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல் அன்மையில் எடுக்கப்பட்ட மார்பளவு புகைப்படம் ஒன்று மற்றும் தங்களது கையொப்பம் அல்லது கைரேகை ஆகியவற்றுடன் தங்களது தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டு மேற்படி ஆவணங்களை தங்கள் வசிக்கும் பகுதிக்கு உரிய கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் சமர்ப்பிக்கலாம் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...