பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்: அதிமுக மூத்த நிர்வாகி செ.ம.வேலுச்சாமி சார்பில் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் சுவரொட்டிகள்..!

கோவையில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மூத்த நிர்வாகி செ.ம.வேலுச்சாமி சார்பில் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.


கோவை: கோவையில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மூத்த நிர்வாகி செ.ம.வேலுச்சாமி சார்பில் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட அதிமுகவின் மூத்த உறுப்பினரான செ.ம.வேலுச்சாமி, எம்.ஜி.ஆர் அவர்களின் காலகட்டத்தில் இருந்தே அதிமுகவில் இருப்பவர். இவர் அமைச்சராகவும், கோவை மாநகர மேயராகவும், கட்சியின் மாவட்ட செயலாளராகவும் இருந்தவர்.

இந்நிலையில், சிலகாலமாகவே இவருக்கு கட்சியில் சரியான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்று பரவலாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கோவை நகர் முழுவதும் செ.ம.வேலுச்சாமி பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

சுவரொட்டிகள் அனைத்திலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிறிய அளவிலான படமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சியின் பெயரை குறிப்பிடாமல், அவர் பெயருக்கு முன்னாள் அமைச்சர், மேயர் என்று மட்டும் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



மேலும், அந்த சுவரொட்டியில் அண்ணாவின் கொள்கைகளை தன்னலமில்லாமல் வழிநடத்துபவர், வழி நடப்போம் போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல, அதிமுகவின் சார்பில் கட்சி அலுவலகத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவிலும் செ.ம.வேலுச்சாமி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகியான செ.ம.வேலுச்சாமி பெயரில், அதிமுக பெயரை தவிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது, அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...