பொள்ளாச்சி அருகே திருமணம் செய்வதாக கூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: பொள்ளாச்சி அருகே திருமணம் செய்வதாக கூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
உடுமலையை சேர்ந்தவர் 26 வயதான பூபதி. இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமியிடம் பூபதி ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையில் சிறுமி மாயமானது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.
பின்னர், புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை பூபதி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, பூபதி இடமிருந்து சிறுமியை மீட்ட போலீசார் பூபதியை போச்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.