கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40.6 அடியாக உயர்ந்து உள்ளது. இதனால், அடுத்த 6 மாதங்களுக்கு கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கும், வழியோர கிரமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் தமிழகத்தில் உள்ள போதிலும், அணை கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. இந்த அணை 50 அடி உயரம் கொண்டது. இருப்பினும், அணையின் பாதுகாப்பிற்காக 45 அடி உயரம் வரை மட்டுமே குடிநீரை தேக்க கேரள அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை சீராக பெய்து வருவதால், அதனை ஒட்டியுள்ள நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கோவை நொய்யல் ஆற்றிலும், சித்திரைசாவடி தடுப்பணையை தாண்டி ஆற்று நீர் வந்து கொண்டு உள்ளது. இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன் சிறுவாணி அணையின் நீர் மட்டம் 35 அடிக்கும் குறைவாக இருந்தது. தற்போது, அணைக்கு அதிகளவு தண்ணீர் வருவதால் அணையின் நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 40.6 அடி என்ற அளவில் உள்ளது. தற்போது, அணையில் இருந்து நாள்தோறும் 101 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதில் கோவை மாநகராட்சியின் தேவைக்காக மட்டும் 97.8 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.