வால்பாறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நகராட்சி கடை வியாபாரிகள்.!!

வால்பாறையில் வாழ்வாதாரங்கள் குறைந்து விட்டதாலும் கொரோனா தொற்று காரணமாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாடகையை தங்களால் கட்ட இயலாது என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


வால்பாறை: வால்பாறையில் வாழ்வாதாரங்கள் குறைந்து விட்டதாலும் கொரோனா தொற்று காரணமாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாடகையை தங்களால் கட்ட இயலாது என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான 300-கடைகள் உள்ளன. இந்த கடைகளை வைத்திருக்கும் வியாபாரிகள் வாடகை முன்பணம் தொகை தொழில் வரி GST, இந்த ஆண்டு கடை வாடகை 15-சதவீதம் உயர்வு காரணமாக ஒவ்வொரு வியாபாரியும் பல லட்சங்கள் நகராட்சிக்குக் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வால்பாறை பகுதியில் வாழ்வாதாரங்கள் குறைந்து விட்ட காரணத்தினாலும் கொரோனா தொற்று காரணமாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாடகையை தங்களால் கட்ட இயலாத நிலையில் இருப்பதால் இதற்குத் தீர்வு காண சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதற்குத் தீர்வு காண வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் சங்க செயலாளர் கீரீன்ஹில்ஸ் ஷாஜூ, பொருளாளர் ஜேசுதாஸ், வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமாரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.



இந்த தொகையைக் கண்டிப்பாகக் கட்ட வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் கூறியதன் பேரில் தற்போது தவணை முறையில் கட்ட ஆவண செய்ய வேண்டும் என்று வால்பாறையில் உள்ள வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் ஆணையாளர் கூறுகையில், தாங்கள் வாடகை முன்பணம் தொகையை உடனடியாக கட்டினால் அதற்குத் தகுந்தாற் போல் உயர் அதிகாரிகளைச் சந்தித்து அதற்குத் தீர்வு காணப்படும் என்று கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில், நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் மற்றும் பொறியாளர் வெங்கடாசலம் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...