கோவையில் ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் 51-பவுன் நகை மற்றும் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 30-பவுன் தங்க மற்றும் வைர நகைகள் திருட்டு தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை: கோவையில் இருவேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவையில் ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து 51-பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை கைரேகை நிபுணர்கள் மோப்ப நாயை அழைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம் பார்க் டவுனை சேர்ந்தவர் அருணாச்சலம்(42). இவர் கணபதி-சத்தி ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த சனி-ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டன.
எனவே, அருணாச்சலம் கடைக்கு விடுமுறை என்பதால் மனைவி மற்றும் 2-குழந்தைகளுடன் கடந்த சனிக்கிழமை காலை வால்பாறைக்குச் சென்றார். பின்னர் மறுநாள் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது. உள்ளே படுக்கையறையிலிருந்த 2-பீரோக்களிலிருந்த உடைமைகள் சிதறிக் கிடந்தன.
மேலும் பீரோவிலிருந்த 51-பவுன் நகைகள் கொள்ளை போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில், கைரேகை நிபுணர்கள் காவல்துறை வீட்டில் அங்கு வந்த தீவிர சோதனை செய்தனர். அங்குப் பதிவாகியிருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர்.
மேலும் வீட்டுக்கு அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி அதில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என விசாரித்து வருகின்றனர். அவரது வீட்டுக்கு அருகே கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். எனவே வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த அவர்களில் யாரோ? இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறை வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
இதேபோல், கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வரக்கூடிய கல்லூரி பேராசிரியர் வீட்டில் உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் வீட்டில் பீரோவிலிருந்த 30-பவுன் நகை வைர மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காவல்துறை கூறியதாவது:-
கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரமேஷ் (38), இவர் 2-நாட்களுக்கு முன்பு அவர் மனைவியை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் அவருடைய சொந்த ஊருக்குத் திருமண நிகழ்ச்சிக்காகச் சென்றார்.
நேற்று இரவு வீட்டிற்கு வந்த போது வீடு உடைக்கப்பட்டு பீரோவைத் திறந்து பார்த்த போது அலங்கோலமாகக் கிடந்தது. இதுகுறித்து தடாகம் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.
காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகைகளைப் பதிவு செய்து மோப்ப நாய்களை அழைத்து வந்து தீவிர சோதனை செய்தனர். இதில் 30-பவுனுக்கு மேல் தங்க மற்றும் வைர நகைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து கொள்ளையர்களை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
குடியிருப்பில் அடுத்தடுத்து ஆட்கள் குடி இருக்கின்ற நேரத்திலேயே சுவர் ஏறிக் குதித்து கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதனால் அந்தப் பகுதியில் குடியிருக்கக் கூடிய அனைத்து பேராசிரியர் குடும்பங்களும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.