வால்பாறைக்கு செல்லும் சாலைகளில் வனவிலங்குகளுக்குத் தொந்தரவு அளிக்காத வண்ணமும் குரங்குகளுக்கு உணவு அளிக்காத வண்ணமும் செல்லுமாறு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வால்பாறை: வால்பாறை செல்லும் மலை சாலையில் குரங்கு மற்றும் வரையாடுகளைத் தொந்தரவு செய்யவோ உணவு வாங்கவோ கூடாது மீறினால் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில், புலி சிறுத்தை யானை காட்டெருமை கரடி மான் வரையாடு அரிய வகை சிங்கவால் குரங்கு, குரங்குகள் போன்றவை வாழ்ந்துவருகின்றது.
ஆழியாறு பகுதியிலிருந்து வால்பாறைக்கு வனப்பகுதி வழியில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் வகையில், உள்ள ஆழியாறு அணையும் காட்சி முனை பகுதி உள்ளது.
இதைப்பார்க்கச் சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே சாலையின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்திப்பார்த்து ரசித்து வருகின்றனர். 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில், காட்சி முனை பகுதியில் வரையாடுகள் மற்றும் குரங்குகள் அதிகமாகக் காணமுடியும்.
சுற்றுலாப் பயணிகள் குரங்குகளையும் வரை ஆடுகளைப் புகைப்படம் எடுத்து வருகின்றனர். மேலும், குரங்குகளுக்கு உணவுகள் வழங்கியும் வருகின்றனர். இதனால் ஆபத்தை உணராமல் குரங்குகள் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதும் வரையாடுகள் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதும், அதிகமாகக் காணமுடிகிறது.

இதனால், குரங்குகளுக்கும் தொந்தரவு ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. அப்பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்லும் பொழுதும் முறையாக வாகனத்தின் கண்ணாடிகளை அடைக்காமல் இருப்பதால் குரங்குகள் வாகனத்திற்குள் சென்று பொருள்களையும், உணவுப்பொருட்களையும் தின்று சேதப்படுத்தி வருகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகம் இயக்குனரின் அறிவுறுத்தலின்படி, ஆழியாற்றில் இருந்து வால்பாறைக்குச் செல்லும் சாலைகளில் வனவிலங்குகளுக்குத் தொந்தரவு அளிக்காத வண்ணமும் குரங்குகளுக்கு உணவு அளிக்காத வண்ணமும் செல்லுமாறு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், வனவிலங்குகளைத் தொந்தரவு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.