கோவை: 35-வது வார்டு, காளப்பட்டி கிராமம் அருகே பெரியார் நகரில், 10-கோடி ரூபாய் மதிப்புள்ள 66-சென்ட் இடம் மீட்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 35-வது வார்டு, காளப்பட்டி கிராமம் அருகே பெரியார் நகரில் உள்ள ஒரு லே-அவுட்டில் சமுதாயக் கூடத்திற்காக 66-சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அந்த இடத்தை 10-நபர்களுக்குப் போலி வரைபடம் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு காளப்பட்டி பேரூராட்சி அதிகாரிகளால் அனுமதி வழங்கி, மனைகளாக கிரையம் செய்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா உத்தரவை அடுத்து, கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அதிகாரி புவனேஸ்வரியால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் உண்மை தன்மை தெரியவந்ததால் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கம்பி வேலிகள் மற்றும் 8-குடிசைகளை அகற்றி மாநகராட்சி சார்பாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "10-கோடி ரூபாய் மதிப்புள்ள 66-சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் திட்டமிட்டபடி சமுதாயக்கூடம் அமைக்கப்படும்," என்றார்.