பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வேலூர் இப்ராஹிம் பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இஸ்லாமிய அமைப்புகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பேச்சுவார்த்தை நடத்தித் திருப்பி அனுப்பி வைத்தார்.
கோவை: பொள்ளாச்சியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வேலூர் இப்ராஹிம் பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டம், புதிய வேளாண் திருத்தச்சட்டம், நீட் தேர்வு போன்ற சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்குப் பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசைக் கண்டித்தும், தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலினைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம்., கோவை குண்டுவெடிப்பு கைதிகளைக் கருணை அடிப்படையில், அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்ய வேண்டும் என்று சில இஸ்லாமிய அமைப்புகள் தமிழக முதலமைச்சருடன் வைத்த கோரிக்கையை நிராகரித்து, அண்ணா பிறந்தநாளில் கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்றும், சிஏஏ போன்ற விஷயங்களில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சரியான புரிதலோடு பேச வேண்டுமென்றும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை ஜனநாயக ரீதியாக விவாதிக்கத் தயாராக பாஜக இருக்கிறது என்றும் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வேலூர் இப்ராஹிமுக்கு பொள்ளாச்சி பகுதியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் எதிர்ப்பு தெரிவித்து இருந்த இஸ்லாமிய அமைப்புகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பேச்சுவார்த்தை நடத்தித் திருப்பி அனுப்பி வைத்தார்.