பழங்குடியின மாணவர்களுக்குச் சாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்.!!

ஜாதி சான்றிதழ் இல்லாததால் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ஜாதிச் சான்றிதழ் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.


கோவை: பழங்குடியின மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் மற்றும் அடிப்படை வசதிகள் கோரி கோவை மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கோவை மாவட்டத்தில் பழங்குடியின மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

அதேபோல் பழங்குடியின கிராமங்களில் பேருந்து வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.



உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். பழங்குடியின மாணவர்கள் கல்வி பயிலக் கிராமங்களில் போதிய மின்சார வசதி செய்து தரவேண்டும்.

ஜாதி சான்றிதழ் இல்லாததால் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ஜாதிச் சான்றிதழ் வழங்கவேண்டும்.

பழங்குடியின மலைவாழ் மாணவிகள் உள்ள கிராமங்களில் பொதுக் கழிப்பிட வசதிகள் செய்து தர வேண்டும் அதைப்போல் பழங்குடியின மாணவ மாணவிகள் பயிலும் பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...