கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் புகைப்படம் எடுக்கக்குட்டி பாம்புக்கு இடையூறு செய்ததால் வனத்துறை விசாரணை.!!

கோவை: கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் புகைப்படம் எடுப்பதற்காக இளைஞர்கள் சிலர் குட்டி பாம்புக்கு இடையூறு கொடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், புகைப்படம் எடுத்து இடையூறு செய்த நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் புகைப்படம் எடுப்பதற்காக இளைஞர்கள் சிலர் குட்டி பாம்புக்கு இடையூறு கொடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், புகைப்படம் எடுத்து இடையூறு செய்த நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணாம்பதி குளத்தில் நேற்று பறவைகள் மற்றும் அங்கு இருக்கக்கூடிய சிறு, சிறு பூச்சிகளைப் புகைப்படம் எடுப்பதற்காகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் வந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஒரு குட்டி பாம்பைப் புகைப்படம் எடுப்பதற்காக வாலைப்பிடித்து இழுத்து இடையூறு செய்துள்ளனர். தொடர்ந்து பாம்பைத் தூக்கி வெவ்வேறு இடத்திற்கும் எடுத்துச் சென்று வைத்து புகைப்படத்தை எடுத்துள்ளனர்.



இதை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ காட்சியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில், குட்டி பாம்புக்கு இடையூறு செய்த நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகைப்படம் எடுத்த நபர்களில் ஒரு சிலர் வனத்துறையினருக்குத் தெரிந்த நபர்கள் என்பதால் அவர்களை விசாரணைக்கு வரும்படி வனத்துறையினர் அழைத்துள்ளனர்.

குளங்களில் பறவைகள், ஊர்வனவற்றுக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...