கோவை நொய்யல் ஆற்றுப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம்..!

மருத்துவ கழிவுகளை குளம், ஆற்றங்கரையில் கொட்டும் தனியார் மருத்துவமனைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவை நொய்யலாற்று பகுதியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை நகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை தனியாக எரியூட்ட மையம் செயல்பட்டு வரும் நிலையில், தனியார் அமைப்புகள் மருத்துவ கழிவுகளை சேகரித்து எரியூட்டும் பணியினை தனியார் மருத்துவமனைகளிடம் கட்டணம் பெற்று செய்து வருகின்றனர்.

ஆனால், ஒரு சில சிறிய தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றாமல் அவற்றை குளக்கரைகளிலும், ஆற்றின் ஓரங்களிலும் கொட்டுவது தொடர் கதையாகவே இருந்து வருகின்றது.



இந்த நிலையில், கோவை புட்டுவிக்கி பாலம் அருகில் நொய்யல் ஆறு செல்லும் வழியில் சாலையோரத்தில் ஏராளமான ஊசிகள் மற்றும் மருந்து குப்பிகள் போன்ற மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி சென்றுள்ளனர்.



சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு இருக்கும் அந்த மருத்துவ கழிவுகளை அகற்றவும், மருத்துவ கழிவுகளை குளம், ஆற்றங்கரையில் கொட்டும் தனியார் மருத்துவமனைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



கொரோனா பரவல் என்பது அதிகரித்துள்ள நிலையில் சாலையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை ஆடு, மாடு, நாய் மற்றும் பறவைகள் உண்ணக்கூடும். இதனால் பல்வேறு நோய்கள் தொற்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...