பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கணேசன் என்ற வாலிபரை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கணேசன் என்ற வாலிபரை போக்சோவில் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கணேசன் (22). இவர் கிணத்துக்கடவில் தனியார் மசாலா நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கும், பொள்ளாச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. மேலும், ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று அந்த வாலிபர் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர், வடக்கிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுமியை அழைத்துக் கொண்டு வடக்கிப்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்த நபரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, இந்த வழக்கு மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. அங்கு விசாரணை செய்த போலீசார், கணேசனை போக்சோவில் கைது செய்தனர்.