9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது - மாநில துணைத் தலைவர்..!

கோவை: உருமாறிய மக்கள் நீதி மய்யம் தற்போது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.


கோவை: 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக பொள்ளாச்சியில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட தென்கிழக்கு தலைமை அலுவலக கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் தங்கவேல் கலந்துகொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்து, ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, உருமாறிய மக்கள் நீதி மய்யம் தற்போது சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் குழுக்கள் நியமிக்கப்பட்டு தேர்தலுக்குத் தயாராகி வருகிறோம்.

நாங்கள் சட்டசபைக்குச் செல்லவில்லை என்றாலும் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக குரல் கொடுப்பது மக்கள் நீதி மய்யம் தான், நாங்கள் அறிவித்த திட்டங்களை தான் தற்போதைய தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

கமல்ஹாசன் சொன்ன ஆலோசனைகளை கேட்டு, எங்களின் திட்டங்களை வழிநடத்திச் செல்லும் திமுகவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலில் மிக பெரிய வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...