பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவை குழு உறுப்பினர்களாக எம்.எல்.ஏக்கள் நியமனம்.!!

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவை குழு உறுப்பினர்களாக எம்.எல்.ஏக்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவை குழு உறுப்பினர்களாக எம்.எல்.ஏக்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை குழு உறுப்பினர்களாக 238-பேர் உள்ளனர். இவர்கள், பல்கலைக்கழக பாடத்திட்டங்கள், கல்லூரி நிர்வாகம், பல்கலைக்கழக மேம்பாட்டுப் பணிகள் போன்றவற்றில் துணைவேந்தருக்கு ஆலோசனை வழங்குவர்.

இந்த செனட் குழுவில் மூன்று விதமான உறுப்பினர்கள் உள்ளனர். அதன்படி, பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மூலம் ஓட்டுப்போட்டுத் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் மற்றும் இரண்டு உறுப்பினர்களை அரசு நியமனம் செய்யும்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை குழு உறுப்பினர்களாக அரசு சார்பில் கொங்குநாடு கட்சியைச் சேர்ந்த திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் மற்றும் நீலகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கணேஷ் ஆகியோரை நியமனம் செய்வதாக அறிவித்தார். இவர்களின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...