திருப்பூர்: திமுக அரசு நீட் தேர்வு ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யும் எனவும், அடுத்த ஆண்டு நீட் தேர்விற்குள் தி.மு.க அரசு விலக்கு வாங்கிவிடும் என முழு நம்பிக்கை உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருப்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாமில் 28-லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் சி.பி.எம் சார்பில் வாழ்த்துகள். தமிழ்நாட்டின் தேவைக்கு ஏற்ப, மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.
நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்றும் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். அதனை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அதைக் கைவிட மறுத்து அடம்பிடிக்கிறது.
மாணவர்களும் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது. என்ன செய்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என எச்.ராஜா கூறுகிறார். இவர் மத்திய அரசு போல நினைத்துப் பேசுகிறார். அரைவேக்காட்டு தனமாக ராஜா போன்றவர்கள், தமிழ்நாட்டின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசி வருகின்றனர்.
6-லட்சத்து 70-ஆயிரம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்களைக் குத்தகைக்கு விடப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பொது நிறுவனங்களை மூடுவதற்கான ஏற்பாடாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது.
இதை குத்தகைக்கு விடுவதன் மூலம் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தான் சாதகமாக அமையும். கார் தொழிற்சாலை மூடுவது என்பது அதன் நிர்வாகம் மட்டுமே எடுக்கும் முடிவு கிடையாது. மத்திய அரசின் ஒப்புதலும் தேவைப்படும்.
தற்போது தொழிற்சாலை மூடப்படுவதால் 40-ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். அகில இந்திய அளவில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 27-ஆம் தேதி இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம்.
இதைத் தமிழக கட்சிகளும் ஆதரித்து பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். மோடி அரசிற்குக் கண்டன தெரிவிக்கும் வகையில் இயக்கம் ஆரம்பிக்கப்படும். மத்திய அரசிற்கு எதிராக வரும் 20-ஆம் தேதி வீடுகளில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் சட்டவிரோத கல்குவாரிகளை மூடுவதுடன் வரும் காலத்தில் இயற்கை வளங்களை அரசாங்கமே கையகப்படுத்தி நடத்தினால் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும். திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் பல சாலைகள் அவல நிலையில் உள்ளது.
அதனை உடனடியாக செப்பனிட வேண்டும். திருப்பூரில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்ட வேண்டும். கடந்த ஆட்சியின் போதே அதிமுக அரசு நீட் தேர்விற்கு விலக்கு வாங்கியிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்ய எடப்பாடி பழனிசாமி தவறிவிட்டார்.
சட்டமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் திருப்பி அனுப்பினால் மீண்டும் ஒரு முறை அதே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அதை அனுப்பினால் அதனை நிராகரிக்க முடியாது.
அதை அதிமுக செய்யவில்லை. திமுக அரசு நீட் தேர்வு ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யும். அடுத்த ஆண்டு நீட் தேர்விற்குள் திமுக அரசு விலக்கு வாங்கிவிடும் என முழு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.