மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து.!!

கோவை: சேலத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி, தலைகீழாக கவிழ்ந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பினார்.


கோவை: சேலத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி, தலைகீழாக கவிழ்ந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பினார்.

கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் மகன் ஆதர்ஷ் (22). இவர் நேற்றிரவு வானதி சீனிவாசனை ரயில் மூலமாகச் சென்னைக்கு அனுப்பிவைத்துவிட்டு, கோவையிலிருந்து சென்னைக்கு மாருதி பலீனோ காரில் கிளம்பியிருக்கிறார்.

இரவு 11:30 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியிலுள்ள பட்டர்ஃபிளை மேம்பாலத்தில் வந்தபோது, ஆதர்ஷ் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியிருக்கிறது.



இதில் கார் தலைகீழாகக் கவிழ்ந்து, சிறிது தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

வானதி சீனிவாசன் இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அன்னதானப்பட்டி காவல்துறை, கடும் சேதமடைந்து கிடந்த காரில் இருந்த ஆதர்ஷை மீட்டனர். அதன் பிறகு நடைபெற்ற விசாரணையில்தான் விபத்தில் சிக்கிய ஆதர்ஷ், வானதி சீனிவாசனுடைய மகன் என்பது போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்விதக் காயமும் இன்றி ஆதர்ஷ் உயிர் தப்பினார். இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான கார் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அன்னதானப்பட்டி காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

விபத்தில் சிக்கிய கார் இந்த விபத்து நடந்த உடனேயே ஆதர்ஷ், அவருடைய அம்மா வானதி சீனிவாசனுக்கு போனில் தகவலைச் சொல்லியிருக்கிறார். உடனே சேலத்திலிருந்த பாஜக நிர்வாகிகளை வானதி, சம்பவ இடத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.

அதன் பிறகு சேலத்திலுள்ள கே.என்.ராவ் மருத்துவமனைக்கு ஆதர்ஷை அழைத்துச் சென்ற பாஜக-வினர், அங்கு பரிசோதனையில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிந்த பிறகு மற்றொரு காரை வரவழைத்து சென்னைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...