கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளாச்சிப்பணிகள் குறித்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் இன்று (13.09.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., முன்னிலை வகித்தார்கள்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்.86க்குட்பட்ட கரும்புக்கடை பகுதியில் இராஜ வாய்க்காலில் தார் வாரப்பட்டுவரும் பணிகள் நடைபெற்றுவருவதையும், வெள்ளலூரில் ரூ.168 கோடியில் மதிப்பீட்டில் 61.62 ஏக்கரில், புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதையும் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தெரிவித்த பின்னர்,

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பையோ மைனிங் (திடக்கழிவு மேலாண்மை) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அங்கு தேங்கிக்கிடக்கும் பழைய கழிவுகளை மிக விரைவாகச் சுத்தம் செய்து அப்புறப்படுத்திடப் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் தொடர்புடைய அலுவலாகளிடம் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர் கு.விமல்ராஜ், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் சுந்தாராஜன், உதவி செயற்பொறியாளர்கள் கருப்புசாமி, சரவணக்குமார், உதவி பொறியாளர் ரவிக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.