கோவையில் இயங்கும் பூச்சிக்கொல்லி ஆய்வகத்தின் மூலமாகத் தரம் உறுதி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளால் விவசாயிகள் பயன்- வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்.!!

கோவை: கோவையில் உள்ள பூச்சிக்கொல்லி ஆய்வகத்தில் பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் தரபரிசோதனை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதால் விவசாயிகளுக்குத் தரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்கிறது என வேளாண்மை உதவி இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் உள்ள பூச்சிக்கொல்லி ஆய்வகத்தில் பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் தரபரிசோதனை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதால் விவசாயிகளுக்குத் தரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்கிறது என வேளாண்மை உதவி இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பூச்சிக்கொல்லி ஆய்வக வேளாண்மை உதவி இயக்குநர் ஷெமிலா ஜெயந்தி கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் கோவையில் இயங்கும் பூச்சிக்கொல்லி ஆய்வகம் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சி கொல்லி, பூஞ்சைக் கொல்லி, களைக்கொல்லி, சிலந்திக் கொல்லி, நூற்புழு கொல்லி, பயிர் வளர்ச்சி ஊக்கிகள் ஆகியவற்றின் தரத்தினை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இவ்வாய்வகத்தில் பிரத்யேக குறியீட்டுடன் ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படும் குறியீட்டு மையங்களிலிருந்து பெறப்படும் பூச்சிக்கொல்லி மாதிரிகளின் வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகள் ஆய்வு செய்யப்படுகிறது.

குறிப்பாகப் பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மை, கார அமிலத் தன்மை, நனையும் தன்மை, துகள் அளவு போன்றவை பரிசோதிக்கப்படுகிறது. இதில் இந்திய தரச்சான்று கழகம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அளவுகளிலிருந்து ஏதேனும் தன்மைகள் மாறுபட்டால் தரக்குறைவு மாதிரி என்ற முத்திரையுடன் தரபரிசோதனை அறிக்கை அனுப்பப்படுகிறது.

மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வியாபாரம் செய்திட விற்பனை நிலையங்களில் சேமிக்கும் போது எளிதில் தீப்பற்றாவண்ணம், தகுந்த சேமிப்பு முறையைப் பின்பற்ற எரிசோதனை மூலம் பூச்சி மருந்துகளின் வெப்பநிலை கண்டறியப்பட்டுப் பாதுகாப்புடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. உரிய உரிமம் பெற்ற பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் தரபரிசோதனை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதால் விவசாயிகளுக்குத் தரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...