கிணத்துக்கடவில் இணையவழி மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்- மனுக்களுக்கு உடனடி தீர்வு.!!!

கோவை: கிணத்துக்கடவு வட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்த இணையவழி மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு வட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்த இணையவழி மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்களிடம் திங்கட்கிழமை தோறும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இணையவழி மூலமாக மக்களிடம் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தபட்டு வருகிறது.

அதன்படி இன்று கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் நடைப்பெற்ற இணைய வழி மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கொடுத்த மனுக்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல ஒருங்கிணைப்பு அலுவலர் அம்சவேணி கலந்துகொண்டு பெற்றுக்கொண்டார்.

இதில் நத்தம் பட்டா கேட்டு 3-பேரும், நத்தம் பட்டா நகல் கேட்டு 2-பேரும்,வீட்டுமனை பட்டாக்கள் கேட்டு 9-பேர் என மொத்தம் 14- மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.

இந்த கூட்டத்தில் நத்தம் பட்டா கேட்ட 3-பேர், நத்தம் பட்டா நகல் கேட்ட 2-பேர் என 5- பேரின் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டன.

மீதியுள்ள 9 -மனுக்களும் இலவச வீட்டுமனை கேட்ட மனுக்களாகும், இந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி தகுதியுள்ள நபர்களுக்கு வீட்டுமனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்துறையினர் தெரிவித்தனர்.

இந்த முகாமில் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கனகேஸ்வரி, தலைமையிடத்து துணை தாசில்தார் குமரிஅனந்தன், கிணத்துக்கடவு மண்டல தாசில்தார் சிவக்குமார் உட்பட வருவாய் துறை அதிகாரிகள் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...