கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பராமரிப்புப் பணிகளை பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கு பராமரிப்பு பணிகளையும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆயத்தப் பணிகளையும் இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, வெள்ளலூர் குப்பைக்கிடங்கு மூலம் பொது மக்களுக்கு எந்த பாதிப்பில்லாத வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தரமாகவும் பணிகளை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இதில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.