கோவை: கிணத்துக்கடவில் கொரோனா மற்றும் சாலைபாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது குறித்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் காவல்துறையினரிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா விதிமுறைகளின்படி ஆட்டோக்களில் பயணிகளை ஏற்ற வேண்டும். ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய செய்ய வேண்டும்.

மேலும், ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை விதிமுறைகளை பின்பற்றி ஆட்டோக்களை இயக்க வேண்டும். நிர்ணயித்த இடத்தில் மட்டுமே ஆட்டோக்களை நிறுத்த வேண்டும். மேலும் இன்சூரன்ஸ், ஆர்.சி, பேஜ் போன்ற ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டிப்பாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் போன்ற அறிவுரைகளை காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தெரிவித்தனர்.