கோவை: கோயம்புத்தூர் மசக்காளிப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்ட்ராய்டு செயலியை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., இன்று (13.09.2021) துவக்கிவைத்தார்கள்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மசக்காளிப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இணையம் மூலம் மாணவ, மாணவிகள் கல்வி பயிலுவதற்கு ஏதுவாக சென்னையை சேர்ந்த Myschooldairy.net நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலியை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்ததார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கோயம்புத்தூர் மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் இத்தகைய வசதி ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை முழுமையாகப் பயன்படுத்துவதில் தான் இதன் வெற்றி இருக்கிறது.
இதன் பயன்பாட்டைப் பார்த்த பின்னர் மற்ற பள்ளிகளுக்குச் செயல்படுத்தப்படும் இச்செயலி மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீட்டுப்பாடங்கள், அறிவிப்புகள் மற்றும் இதர செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க முடியும்.

மாணவர்கள் அனுப்பும் வீட்டுப்பாடங்கள் Google Drive மூலம் சேமிக்கப்படுவதால் தகவல்கள் பத்திரமாக ஆண்டு முழுவதும் வைக்க முடியும். மாணவர்களின் வருகை விபரம், தேர்வு மதிப்பெண்கள், விடுப்பு விண்ணப்பம் இதர செயல்பாடுகள் யாவும் பெற்றோர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்படும் வகையில் இச்செயலி பயன்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியின் போது மாநகராட்சி கல்வி அலுவலர் மைக்கேல் ராஜ், பள்ளி தலைமையாசிரியர் மைதிலி, பள்ளி ஆசிரியர்கள், Myschooldairy நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ராஜ்மோகன் கோவிந்தராஜ், இயக்குநர் பிரேம்குமார், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.