கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே அரசின் தடையை மீறி பொது இடத்தில் மது குடித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி நேற்று இரவு சொக்கனூர் பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அனுமதி இல்லாத பொது இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மது குடித்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பொது இடத்தில் மது அருந்திய சொக்கனூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான செல்வராஜ் என்பவர் மீது கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.