கோவை: கோவை பிரிக்கால் லிமிடெட்டின் 282 தொழிலாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி வேலை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
கோவை: கோவை பிரிக்கால் லிமிடெட்டின் 282 தொழிலாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி வேலை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, போனஸ் உட்பட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காக 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்திய 282 தொழிலாளர்களையும் பிரிக்கால் நிர்வாகம் மகாராஷ்டிரா, உத்தரகண்ட், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு இடம் மாற்றம் செய்ததாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.
பிரிக்கால் நிறுவனத்தின் மாறுதல் நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018 முதல் நடைபெற்ற இந்த வழக்கில் தொழிலாளர்கள் 282 பேருக்கும் பிரிக்கால் நிர்வாகம் மீண்டும் பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் பிரிக்கால் நிர்வாகம் காலதாமதம் செய்வதாக கூறி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி 282 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுபடி வேலை கொடுக்காமல் இருக்கும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.