கோவை: விதை சான்று அலுவலகத்தை கோவையில் இருந்து சென்னைக்கு மாற்றக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழுவினர் விதைகள் மற்றும் செடி கண்டுகளை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: விதை சான்று அலுவலகத்தை கோவையில் இருந்து சென்னைக்கு மாற்ற கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழுவினர் விதைகள் மற்றும் செடி கண்டுகளை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில்,
கோவையில் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் விதைச் சான்றளிப்புத்துறை மற்றும் அங்க சான்று துறையை சென்னைக்கு மாற்ற தமிழ்நாடு அரசு எடுத்த முடிவினை மறுபரிசீலனை செய்து கோவையில் செயல்பட தமிழக முதலமைச்சர் மற்றும் வேளாண்துறை அமைச்சகத்துக்கும் மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், சான்று விதை பண்ணையின் பதிவு 55 ஆயிரம் ஹெக்டாராகவும், சான்று விதையின் உற்பத்தி சுமார் 1.10 லட்சம் டன்களாகவும் இருந்து வரும் நிலையில், கோவை, திருப்பூர், மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து 70 சதவீத விதைப் பண்ணைகள் செய்து செயல்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வருவதால், பெரும் பகுதி விவசாயிகள் சிரமமின்றி இருந்து வருகின்றனர். மாநில அளவில் விதை வணிகம் செய்வதில் பெரும்பகுதியினர் கோவை மண்டலத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் காலதாமதம் இல்லாமல் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்படுகிறது.

எனவே, இயக்குநகரத்தை கோவையிலிருந்து மாற்று செய்யக்கூடாது என்று கைகளில் விதைகள் மற்றும் செடி கண்டுகளை ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.