வால்பாறை நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றை தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்..!

கோவை: வால்பாறையில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: வால்பாறையில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் தடுத்திட வால்பாறை நகராட்சி. வருவாய்த் துறை சுகாதாரத் துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை முன்னிட்டு நகராட்சி மூலம் வீடு வீடாகச் சென்று உடல் வெப்ப நிலை பரிசோதனை வீட்டில் உள்ளவர்களுக்கு சளி காய்ச்சல் இருக்கிறதா என்று விசாரணையும் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று நகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் வால்பாறை பிரதான சாலை, காந்தி சிலை பேருந்து நிலையம். வட்டாட்சியர் அலுவலகம், புது மார்க்கெட், நகைக் கடை வீதி, பிரதான சாலை, கோ ஆப்பரேட்டிங் காலனி, நடுமலை சாலை, அண்ணா நகர், கக்கன் காலனி உள்பட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி அடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



மேலும், சாலைகளில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் கிருமி நாசினி அடிக்கும் பணிகள் நடைபெறும் என்று நகராட்சி சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...