திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக எடுத்துச்சென்ற நகைகளை கோவை எக்ஸ்பிரசில் தவறிவிட்ட நிலையில் ரயில்வே போலீசார் இதனைப்பத்திரமாக மீட்டுக்கொடுத்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி கோயம்புத்தூர் எக்ஸ்பிரசில் திருப்பூரிலிருந்து காட்பாடி வரை பயணம் செய்துள்ளார். இவர் காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கிய சில நிமிடங்களுக்கு பிறகு தனது உடைமைகளை சரிப்பார்க்கும் போது ரயிலில் தனது நகைப்பை ஒன்றை தவறவிட்டதை அறிந்தஇவர் அதிர்ச்சியடைந்துள்ளார். தனது மகளுக்கு கொடுப்பதற்காக வைத்த நகையைத் தொலைத்து விட்டோமே? என்ற மனவருத்தத்தில் உடனடியாக காட்பாடி ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரினையடுத்து துரிதமாக செயல்பட்ட காட்பாடி போலீசார், அந்த வழியாக செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்படி பெரம்பூர் ரயில்வே பெண் உதவி ஆய்வாளர் ராமுதாய் மற்றும் காவலர் தேவேந்திரன் ஆகியோர் நகைப்பை தொலைந்த ரயில் பெட்டியில் உடனடியாக சோதனை நடத்தினர். அப்போது திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த ஆனந்தகுமாரின் நகைப்பை கண்டறியப்பட்டது. இந்த தகவலை காட்பாடி ரயில்வே போலீசாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, ஆனந்தகுமாரை வரவழைத்து உரிய விசாரணைக்குப்பின் நகையை ஒப்படைத்தனர். இச்சம்பவத்தை அறிந்த டிஜிபி தமிழக ரயில்வே போலீசாருக்கு மனதார வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.