கோவை கிணத்துக்கடவு தாலுகாவில் 94 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் நேற்று 6375 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கோவை:தமிழகம் முழுவதும் நேற்று கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. அரசு உத்தரவின் படி நேற்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற முகாமில் ஆர்வத்துடன் வந்து மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். குறிப்பாக கோவை மாவட்டத்தைப்பொறுத்தவரை 1475 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. இதில் கிணத்துக்கடவு தாலுகாவில் உள்ள 34 கிராமப்பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசுப்பள்ளி, அங்கன்வாடி மையங்கள், சமுதாயக்கூடம் உள்ளிட்ட 94 இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 7மணி வரை சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டது. இதில் கோவிட்ஷூல்டு மற்றும் கோவாக்சீன் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை மக்கள் ஆர்வத்துடன் வந்து செலுத்திக்கொண்டனர்.
இதன்படி, நேற்று மட்டும் கிணத்துக்கடவு தாலுகாவில் மொத்தம் 6375 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக பல முறை அரசு மருத்துவமனைக்கு சென்றப்போதும் தடுப்பூசி கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நிலையில் இந்த முகாம்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மக்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.