கோவை கல்லூரி மாணவரின் ஐந்தாவது நவீன கண்டுபிடிப்பு - குறைந்த விலையில் தரமான சோலார் ப்ளூடூத் ஸ்பீக்கர்..!

இந்த ஸ்பீக்கரை மின்சாரம் மற்றும் சோலார் என இரண்டு வகையிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். ரூபாய். 2,000 விற்க திட்டம்.



கோவை: மலிவு விலை தானியங்கி சானிடைசர் மெஷின், 3 இன் 1 சைக்கிள், கெமிக்கல் அளவு கண்டறியும் PH மீட்டர், சிக்னல் பூஸ்டர் உள்ளிட்ட கருவிகளை கண்டுபிடித்த கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் பரத் குமார், புதிதாக சோலார் ப்ளூடூத் ஸ்பீக்கர் என்ற கருவியை தயாரித்துள்ளார்.



நம்மிடம் பேசிய சாதனை மாணவர் பரத் குமார் கூறியதாவது, "நான் கோவை பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறேன். சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் புதுமையான படைப்புகளை கண்டுபிடித்து அவற்றை குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசின் எம்எஸ்எம்இ மாணவர் பிரிவில் பதிவு செய்து பல்வேறு பொருட்களை தயாரித்து வருகிறேன்.

இதுவரை, மலிவு விலை தானியங்கி சானிடைசர் மெஷின், 3 இன் 1 சைக்கிள், கெமிக்கல் அளவு கண்டறியும் PH மீட்டர், சிக்னல் பூஸ்டர் உள்ளிட்ட கருவிகளை தயாரித்து உள்ளேன். தற்போது சோலார் ப்ளூடூத் ஸ்பீக்கர் தயாரித்துள்ளேன். மார்க்கெட்டில் தற்போது இந்த வகையிலான ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்க குறைந்தது 4 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும்.

ஆனால், நான் தயாரித்துள்ள சோலார் ப்ளூடூத் ஸ்பீக்கர் வெறும் 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளேன். குறைந்த விலையில் தரமான பொருட்களை கொண்டு இந்த ஸ்பீக்கரை வடிவமைத்துள்ளேன். மேலும், மின்சாரம் மற்றும் சோலார் என இரண்டு வகையிலும் இந்த ஸ்பீக்கரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

சூரிய ஒளி மூலம் சார்ஜ் செய்தால் நான்கரை மணி நேரம் இந்த கருவியை பயன்படுத்தலாம். அதே, மின்சாரம் மூலம் சார்ஜ் செய்தால் கருவியை 5 மணி நேரம் பயன்படுத்தலாம்.



இதுவரை, என்னுடைய 4 தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, புதிதாக தயாரித்துள்ள இந்த சோலார் ப்ளூடூத் ஸ்பீக்கர் கருவிக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். என்னுடைய முயற்சிகளுக்கு எனது பெற்றோர், கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அளித்துவரும் ஆதரவு எனக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில், மேலும் பல்வேறு பொருட்களை தயாரிக்கும் முயற்சிகளைதொடர்ந்து மேற்கொள்வேன்.

இவ்வாறு பரத் குமார் கூறினார்.



இது தொடர்பாக பரத்குமாரை தொடர்பு கொள்ள +919025259248 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...