கோவையில் மாநகராட்சி சார்பில் 305 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 முதல் மாலை 7 மணி வரை இந்த முகாம்கள் செயல்படும்.
கோவை: இன்று தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில், 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, கொரோனா நோய் பரவல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கி முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 1.5 பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கை அடைய, மாவட்ட நிற்வாகம் மற்றும் மாநகராட்சி பல்வேறு நவீன முறைகளை அறிமுகப்படுத்தி பொதுமக்கள் சிரமப்படாமல், அதிக நேரம் செலவிடாமல் தடுப்பூசி செலுத்திகக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, காரில் அமர்ந்தபடியே தடுப்பூசி செலுத்தும் drive - thru முறையை கோவை அவிநாசி சாலையில் உள்ள 'பன் ரிபப்ளிக் மால்' ( Fun Republic Mall) வளாகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தடுப்பூசி மையத்திற்கு வரமுடியாத வயது முதிந்தவர்கள், கூட்டத்தை தவிர்க்க விரும்புவோர் என பல்வேறு பொதுமக்கள் இந்த நவீன திட்டத்தின் மூலம் இன்று பயனடைந்தனர்.
இந்த முகாம் ஏற்பாடுகளை 'பன் ரிபப்ளிக் மால்' மேலாளர், ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். முகாமில் 300 பேர் காரில் அமர்ந்தபடி தடுப்பூசி செலுத்தி பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.