கோவை: கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறியவர்களுக்கு இதுவரை ரூ-6.99 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
கோவை: கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறியவர்களுக்கு இதுவரை ரூ-6.99 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி முகக்கவசம் அணியாத பொதுமக்கள், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காத நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத நிறுவனங்கள், பொதுமக்களுக்கு இதுவரை ரூ.6.99-கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்களுக்கு ரூ.200-அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை ரூ.6 கோடியே 99 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.