கோவையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடந்த சில தினங்களாக மாயமான எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர், பவானி அருகே சடலமாக மீட்கப்பட்டார்.
கோவை: கோவை கஸ்தூரிநாயக்கன் பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் 54 வயதான ஜெயக்குமார். இவர் காட்டூரில் எலக்ட்ரிக் பொருள்களை விற்பனைச் செய்யும் கடை நடத்தி வருகிறார். கொரோனா காலக்கட்டத்தில் அனைத்துக் கடைகளிலும் வியாபாரம் முடங்கிப்போன நிலையில் இவரது கடையிலும் வியாபாரம் சரியாக நடக்கவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட இவர் மனமுடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இந்த சூழலில் தான் கடந்த 7 ஆம் தேதி தீடிரென வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என்று தெரியாத நிலையில் தான் இவரது மனைவி மங்கையர்கரசி மற்றும் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் வடவள்ளி காவல் நிலைய போலீசார் காணாமல் போனவர் குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்த விசாரணையின் போது தான், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மாயமான ஜெயக்குமார், இன்று பவானி லெட்சுமி நகர் சோதனைச் சாவடி அருகே உயிரிழந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். முதற்கட்டமாக அவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர் அவரை உடலைக் கைப்பற்றிபோலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்து உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.