கோவையில் இன்று காலையிவ ரோஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட வானதி சீனிவாசன் அங்கிருந்த மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் இப்பிரச்சனைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் 16 வதுசட்டமன்றத்தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பது அதிகளவில் காணப்பட்ட நிலையில் தான், மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனைத் தோற்கடித்து வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். தேர்தல் வாக்குறுதியில் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடடிவக்கை எடுப்பதாக தெரிவித்திருந்த வானதி, தொகுதி மக்களிடம் கோரிக்கைகளை அவ்வப்போது கேட்டறிந்து வருகிறார்.
அந்த வரிசையில் இன்று கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட வானதி சீனிவாசன், அங்கு நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த மக்களைச் சந்தித்துப் பகுதிகளில் உள்ள குறைகளைக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து புலியகுளம் அந்தோனியார் பள்ளியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை பார்வையிட்ட எம்.எல். ஏ வானதி, அதனைத் தொடர்ந்து அம்மன்குளம் ஹவுஸிங் யூனிட்டிற்குச் சென்ற அவர் அங்குள்ள மக்களைச் சந்தித்துக் குறைகளை கேட்டறிந்தார். இதனையடுத்து பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து மக்கள் மனுவாக வழங்கினார். இதனைப்பெற்றுக் கொண்ட வானதி, இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் உறுதியளித்துள்ளார்.