கோவை சேலையில் தீப்பிடித்து ஓய்வு பெற்ற பெண் டாக்டர் பரிதாபமாக பலி.!!

கோவை: கோவையில் சேலையில் தீப்பிடித்து ஓய்வு பெற்ற பெண் டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.



கோவை: கோவையில் சேலையில் தீப்பிடித்து ஓய்வு பெற்ற பெண் டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ ரோட்டை சேர்ந்தவர் நடராஜன் என்பவரது மனைவி கண்ணகி (69), இவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர், நேற்று வீட்டில் பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில், தீப்பிடித்து அது மளமளவென உடல் முழுவதும் பரவ தொடங்கியது.

அவர் வலியால் துடித்தார். குடும்பத்தினர் மீட்டு கோவையில், உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, சிங்காநல்லூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...