கோவை: எல்.ஐ.சி ரயில்வே வங்கி உள்ளிட்ட துறைகளைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியாவில் ரயில்வே துறை, எல்ஐசி, மற்றும் வங்கிகளைத் தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாகக் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் பகவதி தலைமையில், இன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே துறை, எல்.ஐ.சி மற்றும் வங்கிகளைத் தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மக்கள் பணம் கொள்ளை போவதைத் தடுக்க ஜவஹர்லால் நேரு எல்.ஐ.சி திட்டத்தைக் கொண்டு வந்து, இன்றைக்கு 60-லட்சம் கோடி தொகை உள்ளது. இதைத் தனியார் மயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே போல் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் மற்றும் அதிக லாபம் ஈட்டும் ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிகண்டிக்கத்தக்கது.
வங்கிகளில் ஏழை எளிய மக்களுக்குக் கடன் வழங்கப்படுவதன் மூலம் அவர்களின்வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருகிறது. 100-நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் வங்கிகளில் சென்று பணம் பெற்று வருகின்றனர்.
வங்கிகளைத் தனியார் மயமாக்கினால் கமிஷன் தர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.