வால்பாறையில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு நண்பர்கள் குழுமம் சார்பில் நிதி உதவி வழங்கல்.!!

வால்பாறை: வால்பாறையில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு நண்பர்கள் குழுமம் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.


வால்பாறை: வால்பாறையில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு நண்பர்கள் குழுமம் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வால்பாறை சோலையாறு அணை செல்லும் சாலையில் ஸ்டேன் மோர் எஸ்டேட் அருகே உள்ள படகு இல்லம் வளைவில் ஜீப்பும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து நடைபெற்றது.

இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய சாபு என்கின்ற ஆண்டனி பலத்த காயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

காலில் பலத்த காயம் அடைந்த சாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த சாபு என்கின்ற ஆண்டனிக்கு வால்பாறை நண்பர்கள் குழுமம் சார்பில் சலாவுதீன் அவர்கள் தலைமையில் ரூபாய் 50-ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

நிகழ்வில் கருணாகரன், பாலாஜி, வெள்ளியங்கிரி, மணிகண்டன், வாமதேவன், பிரசாத், காமேஷ் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...