கோவை: குழந்தை திருமணம், போக்சோ வழக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட காவல் துறை சார்பாகப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
கோவை: குழந்தை திருமணம், போக்சோ வழக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட காவல் துறை சார்பாகப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் எஸ்.பி செல்வனகரதினம் உத்தரவின் பேரில் காவல்துறையினர் பல்வேறு விதமான சமூகப் பொறுப்புள்ள பணிகளைச் செய்து வருகின்றனர்.
அதேபோல் நேற்று குழந்தைகள் திருமணம், போக்சோ வழக்கு தடுப்பு, சுகாதார நடவடிக்கை குறித்து காவல்துறை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்செல்வ நாகரத்தினம் இ.கா.ப., உத்தரவின் பேரில் துடியலூர்காவல் நிலைய ஆய்வாளர் அன்னம் மற்றும் நெகமம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரவணபெருமாள் அவர்களும் நேற்று (11.09.2021) பொதுமக்களுக்கு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தை திருமணம், போக்சோ, கொரோனா பரவும் தீவிரம், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது பற்றியும், சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் சமூக ஊடகங்களைக் கையாளுவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் '9498181212', மற்றும் வாட்ஸ்அப் எண் '7708100100' என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் ரகசியங்கள் காக்கப்படும்.