மேட்டுப்பாளையத்தில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி; 4 நாள்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவு!

கோவை மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு உதவிப்பெறும் பள்ளியைச்சேர்ந்த மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானநிலையில், தொடர்ந்து 4 நாள்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதோடு அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு உடற்பரிசோதனையை மருத்துவக்குழுவினர் மேற்கொண்டுவருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல்12 வகுப்பு வரையிலான வகுப்புகள்தொடர்ந்து இயங்கிவருகிறது. மேலும் அரசு தெரிவித்துள்ளது போல், தினமும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்ப பரிசோதனை கண்காணிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தான் மேட்டுப்பாளையம் தாலுகா பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்குத் தொடர்ந்து இரண்டு நாள்களாக காய்ச்சல் மற்றும் சளித் தொந்தரவு இருந்துள்ளதை ஆசிரியர்கள் கவனித்து வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று முன்தினம் மாணவர்கள் இருவருக்கும் முழு உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதுஉறுதியாகியுள்ளது.

இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின்படி, பள்ளி வளாகத்தைச்சுற்றியும் மற்றும் வகுப்பறைகள் அனைத்திற்கும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுவருகிறது. மேலும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ள மாணவர்களுடன் படித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். இதோடு மட்டுமின்றி தொடர்ந்து 4 நாள்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இப்பள்ளியில் பணியாற்றி வரும் 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...