கோவையைச் சேர்ந்த மளிகை வியாபாரி உறவினரின் திருமண நிகழ்விற்காக வெளியூர் சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டினை உடைத்து 10 பவுன் மற்றும் ரூ.3 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கோவை: கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன் நகரைச்சேர்ந்தவர் 58 வயதான ரத்தின பாண்டியன்.
இவர் அதே பகுதியல் தனது வீட்டிற்கு அருகாமையிலேயே மளிகைக்ச கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் உள்ள உறவினர் வீட்டின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மர்ம நபர்கள் ரத்தின பாண்டியனின் வீட்டு பூட்டில் உள்ள ஸ்ருவை கழட்டி, பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் நடத்த அடுத்த நாள் காலையில், அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவு திறந்திருப்பது குறித்து உரிமையாளரான ரத்தின பாண்டியனுக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் இவரது சகோதரர் கொள்ளைச் சம்பவம் குறித்து பசுபதிபாண்டியனுக்கு ரோஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் கதவு மற்றும் பீரோவில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்டோரை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீட்டில் யாரும் இல்லாதது எப்படி தெரிந்திருக்கும்? ஒரு வேளை இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பது அப்பகுதியைச்சேர்ந்தவராக இருக்கக்கூடுமோ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.