சிறை கைதிகளை விடுவிப்பதில் பாரபட்சம் காட்டும் தமிழக அரசு; 10 ஆண்டு காலம் சிறையில் வாடும் முஸ்லீம்களை விடுக்க கோரிக்கை விடுத்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லீம்கள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் சிறை கைதிகளை விடுவிடுப்பதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.



கோவை: தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லீம் உள்பட அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என இன்று கோவை செஞ்சிலுவை சங்கத்தின் முன்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்த்தில், சிறை என்பது குற்றவாளியை சீர்த்திருத்தம் செய்யும் இடமாக இருக்க வேண்டுமே தவிர சித்ரவதை செய்யும் இடமாக இருக்கக்கூடாது என்பதே உலக தத்துவம். ஆனால் தமிழகத்திலே ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தில் அடிப்படையில் விடுவிப்பதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டினர். எனவே பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்க்கை ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசின் முன்வைத்தனர்.



குறிப்பாக தமிழகத்தில் தற்போது தமிழகத்தில் 2548 சிறைவாசிகள் இருப்பதாகவும் அதில் 144 பேர் பெண் சிறைவாசிகள் என்றும் தெரிவித்தார். 352 பேர் 14 ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும சிறைவாசிகளாக இருப்பதாகத் ஆர்பாட்டத்தின் போது பாப்புலர் ப்ரண்ட் ஆப் கட்சியின் அப்துல் ஹக்கீம் தெரிவித்தார்.



இதோடு உச்ச நீதிமன்றமே 164 விதியின் அடிப்படையில் மாநில அரசுகளே விடுதலை செய்ய முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கும் நிலையில் அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள நீண்ட காலமாக சிறையில் இருக்கக்கூடியவர்களை முதல்வர் முக ஸ்டாலின் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.



மேலும் ஆர்ப்பாட்டத்தின் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தற்பொழுது புதிதாக தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளஆளுநர் ரவி தேசிய இனங்களுக்கான விடுதலைக்கு எதிரானவர்கள் என்றும் மாநில உரிமைகளுக்கு எதிரானவர் என்று தெரிவித்தார். எனவே மத்திய அரசு புதிதாக நியமித்த அரசு இந்த ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துவதாக தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு நடத்துவது என்பது குலக்கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது போல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். எனவே தமிழக அரசு அமைச்சரவையில் ஒரு தீர்மானத்தை இயற்றி நீட் தேர்வை நடத்த கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் உடைய நிலைப்பாடு என தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு தலைவர், A.S. இஸ்மாயில் மாநில துணைத்தலைவர் A. ஹாலித் மூகமது, செயலாளர் N. உபைதுர் ரஹ்மான் மெற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...