மேட்டுப்பாளையம் – கோவை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்; மத்திய ரயில்வே அமைச்சருக்கு எம்.பி அ.ராசா கோரிக்கை!

மேட்டுப்பாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை இயங்கும் பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வலியுறுத்தி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அ.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளை மக்கள் தினசரி அலுவலகத்திற்கு செல்வது, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வருவது போன்ற பலவற்றிற்கு ரயில் சேவை தான் முக்கிய பங்கு வகித்து வந்தது.

இவர்களுக்காகவே மேட்டுப்பாளையம் முதல் கோவை முதல் தினமும் 5 முறை பயணிகள் ரயில் சேவை இயங்கி வந்தது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரயில் சேவையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. அதில் மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை இயங்கும் பயணிகள் ரயிலும் இடம் பெற்றிருந்தது. இதன் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் தான் இந்த சேவையை உடனடியாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுவந்தது. மேலும் மேட்டுப்பாளைம் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்றுவருவதால் பேருந்துகள் அனைத்தும் மாற்றுப்பாதையில் சென்று வருவதால் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதுக்குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் இதுக்குறித்து பரீசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் தான் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினா் அ.ராசா, மேட்டுப்பாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேட்டுப்பாளையம் முதல் கோவை பயணிகள் ரயிலைத் தொடர்ந்து இயக்கவும் மற்றும் பயணிகளுக்கான கட்டணம் ரூபாய் 30 லிருந்து ரூ.10 ஆக குறைக்க வலியுயுத்தி கோரிக்கை கடிதம் ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் க்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...