கிணத்துக்கடவு பகுதியில் இன்று நண்பகலில் பெய்த பலத்த மழை; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

கோவை கிணத்துக்கடவு பகுதியில் காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் இன்று நண்பகல் பெய்த பலத்த மழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கோவை: கோவை எப்போதும் குளிர்ச்சியான சூழலில் தான் இருக்கும். கோவையில் இருந்து பழகிய மக்கள் எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் நிச்சயம் இருக்க முடியாது.

அந்த அளவிற்கு மக்களுக்கு பிடித்தமான காலநிலை சூழலைத் தான் கோவை மாவட்டம் கொண்டிருக்கும். அதற்கேற்றால் போல் கிணத்துக்கடவு மற்றும் கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விட்டு மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக எந்த மழைப்பொழிவும் இல்லாமல் பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. வழக்கத்தை விட அதிகமான வெப்பத்தின் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வந்தனர்.

அதே மட்டுமின்றி விளைநிலங்களில் பயிரிடப்பட்ட தக்காளி போன்ற சாகுபடிகளுக்கும் தண்ணீர் இல்லாமல் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் விவசாயிகள் இதனை பராமரித்துவருகின்றனர்.



இச்சூழலில் தான் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில், தீடிரென நண்பகில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் பெய்த மழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...